Ads Area

கேரளாவில் கிறிஸ்தவ குடும்பங்கள் 4 குழந்தைகள் பெற்றால் ரூ.2,000 உதவித்தொகை: பிரசவ செலவும் இலவசம்.

கேரளாவில்  4 குழந்தைகளுக்கு மேல் உள்ள பெற்றோருக்கு ரூ.2000 உதவித்தொகை உள்பட  பல்வேறு சலுகைகளை அளிப்பதாக கிறிஸ்தவ சபை அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில்  பாலா சீரோ மலபார் கத்தோலிக்க சபை, 2000ம் ஆண்டுக்கு பிறகு திருமணம்  செய்தவர்களுக்கு 4 மற்றும் அதற்கு மேல் குழந்தைகள் உள்ளவர்களுக்கு மாதம்  தோறும் ரூ.1,500 உதவி தொகை வழங்கப்படும் என  அறிவித்தது. சபையை  சேர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்டதாக அது தெரிவித்தது. இந்நிலையில், பத்தனம்திட்டா  மலங்கரை கத்தோலிக்க சபையும் இதுபோன்ற சலுகைகளை அறிவித்துள்ளது.

இது தொடர்பாக  இதன் ஆயர் சாமுவேல் மார் ஐரேனியோஸ் , சபைக்கு உள்பட்ட அனைத்து  சர்ச்சுகளுக்கும் அனுப்பி உள்ள அறிக்கையில், ‘நமது  சபையை சேர்ந்தவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இதற்காக சபையை  சேர்ந்தவர்களின் 4 அல்லது அதற்கு மேல் குழந்தைகள் இருக்கும்  குடும்பத்தினருக்கு மாதம் ரூ.2000 உதவி தொகை வழங்கப்படும். 4வது  குழந்தை முதல் பிரசவ செலவுக்கான உதவியும் செய்யப்படும். இந்த குடும்பத்தினருக்கு,  நம் சபைகளில் வேலைக்கு முன்னுரிமை வழங்கப்படும். குழந்தைகளுக்கு சபையின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளிலும் முன்னுரிமை  வழங்கப்படும். குடும்பத்திற்கு தேவையான உதவிகள் செய்யப்படும்,’ என கூறப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe