Ads Area

மங்கள எனும் ஆளுமை மறைந்த செய்தி இலங்கை அரசியலின் துக்கத்தினம் : மீஸான் ஸ்ரீலங்கா இரங்கல்.

அசைக்க முடியாத இலங்கை அரசியலில் எல்லோர் மனதையும் அசைத்த, இலங்கையர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவராக இருந்த இலங்கை அரசியல் வரலாற்றில் மங்கள சமரவீர எனும் பெயர் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. இனவாதம், பிரதேசவாதம், மதவாதம் போன்ற பூதங்கள் எழும்போதெல்லாம் எல்லோரையும் இலங்கையர்களாக சிந்திக்க வைத்த நல்ல தலைமைத்துவம் அவர். இந்த நாட்டின் தலைமை பொறுப்பை ஏற்று நடத்த தகுதியான ஒருவராக தன்னை அடையாளப்படுத்தி கொண்டவராக இருந்துள்ளார். அவரது இழப்பானது இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் இழப்பாக உணரப்படுகிறது. 

சர்வதேச உறவை வலுவாக இலங்கையின் பக்கம் இழுத்துவந்து வெளிவிவகார அமைச்சராக இருந்துள்ளார். மாத்திரமின்றி தான் வகித்த சகல பதவிகளையும் இந்த நாட்டின் அபிவிருத்திக்காகவும், நாட்டின் மேம்பாட்டுக்காகவும் பயன்படுத்தியுள்ளார். கொரோனாவில் இந்த நாடு இழந்த மிகப்பெரும் சொத்தாக மறைந்த மங்கள சமரவீராவை காணலாம். அவர் குணமாகி வரும் சேதி கேட்டு ஆறுதலைடைந்த இலங்கையர்களுக்கு அவரது இழப்பு பேரதிர்ச்சியாக வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரின் நெருங்கி தோழராக இருந்து அவர் வழங்கிய ஆலோசனைகள் இந்த நாட்டின் மேம்பாட்டில் செல்வாக்கு செலுத்தியுள்ளது.  அவரது இழப்பினால் துன்பம் கண்ட உறவுகளுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள் ! 

ஊடக பிரிவு 

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe