பயணத்தடையை நீக்கியது ஓமான்..!! இந்தியாவில் இருந்து ஓமான் வர அனுமதி..!! பயண நடைமுறை என்ன..??
இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து ஓமான் வருவதற்கு கடந்த சில மாதங்களாக பயணத்தடை விதித்திருந்த நிலையில், தடுப்பூசி போடப்பட்ட பயணிகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிப்பதாக ஓமான் அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
இந்த முடிவானது செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வருவதாக ஓமான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண நடைமுறைகள்:
நாட்டிற்குள் வரும் அனைத்து பயணிகளும் கொரோனா தடுப்பூசி சான்றிதழை QR குறியீட்டோடு அளிக்க வேண்டும்.
தடுப்பூசிக்கான கடைசி டோஸ் நாட்டிற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஓமான் சுகாதாரத்துறை அங்கீகரித்துள்ள தடுப்பூசிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், அனைத்து ஓமானி குடிமக்கள், குடியிருப்பாளர்கள், ஓமான் விசா வைத்திருப்பவர்கள் மற்றும் அரைவல் விசாவுக்கு தகுதியானவர்கள் கொரோனாவிற்கான விதிமுறைகளின்படி நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.
எதிர்மறை PCR சோதனை முடிவை வைத்திருக்கும் பயணிகளுக்கு தனிமைப்படுத்தலில் இருந்து விலக்கு அளிக்கப்படும்.
எட்டு மணி நேரத்திற்கு மேல் பயணிக்கும் விமானங்கள் மற்றும் ட்ரான்சிட் விமானங்களாக இருந்தால் ஓமான் வருவதற்கு 96 மணி நேரத்திற்குள் சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்.
குறுகிய நேரத்தில் ஓமான் வரும் விமானங்களுக்கு, சோதனையானது விமானம் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
PCR சோதனை முடிவு இல்லாமல் வருபவர்கள் வருகையின் போது PCR சோதனை மேற்கொண்டு, எதிர்மறை முடிவு வரும் வரை கண்காணிப்பு சாதனத்தை அணிந்து கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும்.
செய்தி மூலம் - https://timesofoman.com
தமிழில் - www.khaleejtamil.com