முஹமட் றிஸ்வான் (அதிபர்)
கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் (நிதி) அல்-ஹாஜ் I.M. ஹுஸைன் அவர்களின் சேவை நிறைவையொட்டி சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் MSS. நஜீம் தலைமையில் சேவைநலன் பாராட்டு விழா 2021/07/31 ஆந் திகதி சம்மாந்துறை அல் -அக்ஸா வித்தியாலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் அல்ஹாஜ் IM. ஹுஸைன்- DCS (Finance) அவர்களுக்கு வலயக்கல்விப் பணிப்பாளரினால் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் அதிபர்களினாலும் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், பொறியியலாளர், கணக்காளர், தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மற்றும் அதிபர்கள் கலந்து சிறப்பித்தனர்.