சம்மாந்துறை சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் இளைஞர் அணியினர் ஏற்பாட்டில் இன்று "வீட்டுக்கு வீடு மரம்" நடும் நிகழ்வு ஒன்று இடம் பெற்றுள்ளது.
சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களின் எண்ணக்கருவில் உருவான ஆகஸ்ட் மாதம் 1 ம் திகதி "வீட்டுக்கு வீடு மரம்" செயல் திட்டமானது கட்சியின் சம்மாந்துறை இளைஞர் அணியினரால் செந்நெல் கிராமம் 01 இல் சிறப்பாக இடம் பெற்றது.
இந் நிகழ்வில் இளைஞர் அணியினரால் மரக் கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன.