கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட விமான தடை நீடித்து கொண்டே உள்ளது. குறிப்பாக இந்தியா- சிங்கப்பூர் இடையிலான விமான தடை எப்போது தளர்த்தப்படும் என்ற தகவல்களே இல்லாமல் உள்ளது.
இதனால் அதிகளவு இந்திய ஊழியர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கலை எதிர் கொண்டுள்ளனர்.
ஏனெனில் சிங்கப்பூரில் இருந்து இந்தியாவிற்கு செல்ல முடியும் விமானங்கள் இயங்குகின்றன. ஆனால் மீண்டும் தமது வாழ்வாதாரத்திற்காக சிங்கப்பூர் வர இயலாது.
சிங்கப்பூரில் கட்டுமான துறையில் தொழில்புரியும் முத்து என்பவர் தமிழகத்தில் உள்ள தனது குழந்தை மற்றும் குடும்பத்தை தொலைபேசியிலேயே தொடர்பு கொள்கின்றார்.
தனது மகளுக்கு அடுத்த மாதம் மூன்று வயதாகின்றது ஆனால் தனது மகளை சந்திக்க முடியாமல் கவலையில் வாடியுள்ளார்.
ஒவ்வொரு நாளும் தொலைபேசியில் “எப்பொழுது வீட்டிற்கு வருவிங்க” என்று அவரிடம் மகள் கேட்பதாக அவர் தெரிவித்தார்.
ஆனால் அவர் தனது மனைவியிடமும் பிள்ளையிடமும் சிங்கப்பூர் வருவது எளிது ஆனால் மீண்டும் “சிங்கப்பூர் வருவது தான் மிக கடினமாகும்” என்று கூறுவதாக தெரிவிப்பார்..
இது திரு.முத்துவிற்கு மாத்திரம் நிகழும் கவலையான தருணம் அல்ல மாறாக சிங்கப்பூரில் மற்றும் வளைகுடா நாடுகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்குமான ஓர் கவலையான தருணம் இதுவாகும்.
ஒருவர் தனது குழந்தை பிறந்து ஒன்றரை வருடங்கள் சென்றும் இதுவரை நேரில் எனது குழந்தையின் முகத்தை பார்க்க வில்லை என தெரிவித்தார்.
சிங்கப்பூரில் கிருமித்தொற்று பரவ தொடங்கிய ஆரம்பம் முதல் பல மாதங்கள் கடந்து இன்று வரை இந்தியாவுடனான விமான போக்குவரத்துக்கு தடை நீடிக்கின்றது.
எனினும் இந்தியாவில் உள்ள ஊழியர்கள் மீண்டும் தமது தாயகமான இந்தியாவிற்கு திரும்ப முடியும்.
அதற்காக இந்திய மத்திய அரசின் சிறப்பு ஏற்பாட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படுகின்றன.