Ads Area

துபாயில் கர்ப்பிணி பூனையைக் காப்பாற்றிய நால்வருக்கு துபாய் மன்னர் தலா 50,000 திர்ஹம் பரிசு.

மாடியில் இருந்து சாலையில் விழ இருந்த கர்ப்பிணி பூனையை, லாவகமாக காப்பாற் றிய இந்தியர்கள் உள்பட 4 பேருக்கு துபாய் மன்னர் ஆச்சரிய பரிசு கொடுத்து பாராட்டி இருக்கிறார்.

துபாயில் உள்ள டெய்ரா (Deira) பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் 2 வது மாடியின் ஓரத்தில், கர்ப்பிணி பூனை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. எப்போதும் கீழே விழலாம் என்ற நிலையில் இருந்த அதைக் கண்ட அந்தப் பகுதியை சேர்ந்த 4 பேர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். ஒருவர் வீட்டில் இருந்து போர்வையை எடுத்துவந்தார். அதை நான்குபேரும் பிடித்துக்கொண்டனர். பின்னர் பூனையை மேலிருந்து அதில் குதிக்கும்படி செய்தனர்.

நினைத்தபடி அந்தப் பூனை போர்வையில் விழுந்தது. இதையடுத்து அவர்கள் அந்தப் பூனை யை பத்திரமாக தரையில் இறக்கிவிட்டனர். அது அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது போல பார்த்துவிட்டுச் சென்றது. இதை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த இளைஞர்களின் மனித நேயம் சமூக வலை தளங் களில் பாராட்டைப் பெற்றது.

இந்த வீடியோவை துபாய் மன்னரும் அட்சியாளருமான ஷேக் முகமது, தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, இந்த இளைஞர்களை பாராட்டினார். பின்னர் அவர்களை அடையாளம் காணும்படி போலீசாருக்கு உத்தரவிட்டார். அவர்கள் அந்த 4 பேரையும் தேடி கண்டுபிடித் தனர். அவர்கள் கேரளாவைச் சேர்ந்த நாசர் ஷிகாப், முகமது ரஷீத், பாகிஸ்தானை சேர்ந்த அடிப் மெஹ்மூத், மொராக்கோவைச் சேர்ந்த அஷ்ரப் ஆகியோர் என தெரியவந்தது. அவர்களை அழைத்த மன்னர், தலா 50,000 திர்ஹாம் (ரூ.10 லட்சம்) பரிசாக கொடுத்து பாராட்டியுள்ளார்.

அந்த இளைஞர்கள் பூனையை காப்பாற்றிய  வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe