Ads Area

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ.சம்சுதீன் கடமையேற்பு.

 (அஸ்லம் எஸ்.மௌலானா)

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய அதிபராக எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன்போது பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினராலும் உதவி அதிபர் எம்.எம்.நிஸார் மற்றும் ஆசிரியர்களினாலும் நலன் விரும்பிகளினாலும் அவர் வரவேற்கப்பட்டதுடன் இங்கு அதிபராகக்  கடமையாற்றி, கல்முனை அல்பஹ்ரியா தேசிய பாடசாலைக்கு அதிபராக இடமாற்றம் பெற்றுச் செல்கின்ற எம்.எஸ்.எம்.பைசால் அவர்களிடமிருந்து பொறுப்புகளைக் கையேற்றார்.

இலங்கை அதிபர் சேவை தரம்-2 ஐ சேர்ந்த எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் இதற்கு முன்னர் சாய்ந்தமருது றியாலுல் ஜன்னாஹ் வித்தியாலயத்தின் அதிபராக பல வருடங்கள் கடமையாற்றி, இப்பாடசாலையின் பௌதீக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் பெரும் பங்காற்றியிருந்தார்.

அதற்கு முன்னர் சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ்.பாடசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய காலப்பகுதியில் தரம்-05 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிக மாணவர்களை சித்தி பெறச்செய்து, அப்பாடசாலையை பிரபல்யமிக்க பாடசாலையாக முன்னிலைக்குக் கொண்டு வருவதில் எம்.ஐ.சம்சுதீன் அவர்கள் முக்கிய பாத்திரமாகத் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe