எனக்கு 23 வயது. கொழும்பில் software engineer ஆகப் பணிபுரிகின்றேன். இருவேளை உணவுகளும் எனது நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. எனக்கு உணவு வேளை தவறாது உண்கின்றேன். பார்டிகளில் மதுவருந்தும் பழக்கமுண்டு. (கிழமைக்கு ஒருமுறை) இப்போது பிரச்சினை என்னவென்றால் உணவுண்ணாத இடைப்பட்ட நேரத்தில் வயிறு பொருமுகிறது. அஜீரணமாகவும் மிதமான எரிச்சலுணர்வும் காணப்படுகிறது. ஆனால் உணவுண்டபின் ஆசுவாசமாக இருக்கிறது. இது அல்சரில் சாத்தியமில்லை தானே? ப்ளீஸ் விளக்கமளியுங்கள் டாக்டர். (கிருத்திகன், கொழும்பு)
இது ஒரு மிகப் பொதுவான செரிமானப் பாதையில் ஏற்படும் ஒரு கோளாறாகும். பாலின / வயது வேறுபாடின்றி ஏற்படும் ஒரு பிரச்சினை
அல்சர் என்பது என்ன?
தொண்டையில் தொடங்கி இரைப்பை வரை உணவு செல்ல உதவும் உணவுக்குழாய், இரைப்பை, முன்சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் புண்களைப் பொதுவாக ‘பெப்டிக் அல்சர்’ (Peptic ulcer) என்கிறோம்.
இரைப்பையில் புண் ஏற்பட்டால் ‘கேஸ்ட்ரிக் அல்சர்’ (Gastric ulcer) என்றும், முன்சிறுகுடலில் புண் ஏற்பட்டால் ‘டியோடினல் அல்சர்’ (Duodenal ulcer) என்றும் அழைக்கிறோம்.
இரைப்பையில் உணவு செரிப்பதற்காகச் சுரக்கப்படுகின்ற ஹைட்ரோகுளோரிக் அமிலமும் , பெப்சின் எனும் என்சைமும் சில காரணங்களால் அளவுக்கு அதிகமாகச் சுரக்கும்போது, இரைப்பை, முன்சிறுகுடலின் சுவற்றில் உள்ள மியூகஸ் படலம்,அழற்சியுற்று வீங்கிச் சிதைவடையும். இதை ‘இரைப்பை அழற்சி’ (Gastritis) என்கிறோம். பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர்.
இதைக் காலத்தோடு கவனிக்கத் தவறினால் அல்லது அலட்சியப்படுத்தினால் ,நாளடைவில் இரைப்பைப் புண்ணாக/ கட்டிகளாக இரத்தப் போக்காக மாறி சத்திரசிகிச்சை வரை செல்ல வாய்ப்புண்டு.
01. காரம் நிறைந்த, புளிப்பு மிகுந்த, மசாலா கலந்த உணவு,
02. எண்ணெயில் பொரித்த உணவு வகைகளை அதிகமாக சாப்பிடுவது
03. மது அருந்துதல்
04. புகைபிடித்தல்
05. மென் குளிர்பானம், காபி, தேநீர் பானங்களை அதிகமாகக் குடிப்பது
06. ஸ்டீராய்டு மாத்திரைகள், ஆஸ்பிரின், புரூஃபன் போன்ற வலிநிவாரணி மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் அடிக்கடி சாப்பிடுவது
07. உணவை நேரம் தவறிச் சாப்பிடுவது
08. பட்டினி கிடப்பது போன்ற தவறான உணவுப் பழக்கங்கள்
09. மேலும் சுகாதாரமற்ற குடிநீர்
10. கலப்பட உணவு, மாசடைந்த சுற்றுச்சூழல் போன்ற காரணங்களால் ‘ஹெலிக்கோபாக்டர் பைலோரி’ (Helicobacter pylori) எனும் கிருமி உணவுப் பாதைக்குள் நுழைந்து இரைப்பைப் புண்ணை உண்டாக்குகிறது.
மனக்கவலை, பணியில் பரபரப்பு, கோபம், தூக்கமின்மை போன்ற காரணிகளும் இரைப்பைப் புண் வருவதைத் தூண்டுகின்றன.
11. சிலவேளைகளில் பெரிய அறுவைச் சிகிச்சை, புறவழிக் காயங்கள், தீக்காயங்கள், கடுமையான கிருமித் தொற்றுகளும் இரைப்பையழற்சி உருவாகக் காரணங்களாகின்றன.
12. உடற்பருமனைக் குறைக்க மேற்கொள்ளப்படும் அறுவைச் சிகிச்சையின்போது நிகழும் சீரமைக்கப்பட்ட செரிமானக் குழாயாலும் இரைப்பையழற்சி உருவாகலாம்.
13. நாட்பட்டக் காரணங்களாக பக்டீரியா, முதன்மையாக எலிக்கோபேக்டர் பைலோரி கிருமித்தொற்று, பித்தநீர் பின்னொழுக்கு (bile reflux), உளைச்சல் ஆகியவற்றைக் கூறலாம்.
14. சில தன்னெதிர்ப்பு பிறழ்வுகளும் இரைப்பையழற்சியை உருவாக்கலாம்
உணவு திட்டம்
சிறிய அளவில், அடிக்கடி உணவு உட்கொள்வது நல்லது இதனால் வயிற்றில் அதிக அமிலத்தை உருவாவதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படுகிறது.
இதில் வயிற்றின் கொள்ளளவு திறன் கூட ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. கூடுதலாக, ஒவ்வொரு வேளை சாப்பாட்டுக்கும் இடையே நீண்ட இடைவெளி விடுவதினால் அமில உற்பத்தி குறையும். இது வயிற்றின் வரிகளை மேலும் சேதப்படுத்தாது இருக்கும்.
புரோபயாடிக்குகளின் பயன்பாடு
புரோபயாடிக்குகள் சாதாரண குடல் சுரப்பிகளை நிரப்பி, வயிற்றுப் புண்களை குணப்படுத்துவதில் உதவுகின்றன, இருப்பினும் அவை வயிற்றில் அமில சுரப்புகளை பாதிக்காது.
தயிர் மற்றும் மோர் உணவில் சேர்த்துக்கொள்ளப்பட வேண்டிய இயற்கை புரோபயாடிக்குகள் ஆகும்.
01. மது விலக்கு
02. ஆல்கஹால் வயிற்றின் உட்புறத்தை எரிச்சலூட்டுவதாக அறியப்படுகிறது.
03. புகைப் பிடிப்பதை தவிர்ப்பது
04. வயிற்றில் அசிட் சுரப்புகளை அதிகரிக்கக்கூடிய பிரபலமான காரங்களில் புகைபிடிப்பது மிகவும் முக்கியமானது.
05. காரமான உணவுகளைத் தவிர்ப்பது
06. காரமான அல்லது மற்ற எரிச்சலூட்டும் உணவுகள் வயிற்று அமில சுரப்பை அதிகரிக்க மற்றும் வயிற்று உள் புற சேதத்தை அதிகரிக்கிறது.
உடல் எடை மேலாண்மை
எடை குறைப்பு அல்லது இலக்கு தொப்புள் சுற்றவை BMI ஐ அடைவது நாள்பட்ட இரைப்பை அழற்சியின் தீவிரத்தை குறைப்பதில் உதவுகிறது.
தவிர, பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் நிறைந்த உணவுப் பயன்மிக்கது.
மன அழுத்தம் மேலாண்மை
மன அழுத்தம் வயிற்றில் அமில சுரப்பை அதிகரிக்க கூடிய மற்றொரு காரணியாகும். யோகா, சுவாச பயிற்சி, மற்றும் தியானம் ஆகியவை மன அழுத்தத்தை கட்டுப்படுத்த பயனுள்ளதாக இருக்கும்.