Ads Area

தம்புத்தேகமவில் ஆறு வயது சிறுமி மீது இரும்புக் கதவு சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழப்பு.

தம்புத்தேகமவில் ஆறு வயதுச் சிறுமி ஒருவர் மீது பெரிய இரும்புக் கதவு ஒன்று சரிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று குழந்தை தனது தாயுடன் தனது ஆசிரியரின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் பொலிஸாரின் தெரிவிக்கையில், தாய் கதவை திறக்க முற்பட்ட போது திடீரென குழந்தையின் மீது கதவு விழுந்துள்ளது.

இதனால் குழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, ஆனால் சிறுமியை அனுமதிக்கும்போதே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. 

செய்தி மூலம் - https://www.newswire.lk



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe