Ads Area

மஜீட்புர ஜும்ஆ பள்ளிவாசல் கட்டுமான பணிகளுக்கு தனவந்தர்களிடமிருந்து உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது, முடியுமானவர்கள் உதவி செய்யுங்கள்.

மஜீட்புர ஜும்ஆ பள்ளிவாசல் கட்டப்பட்டு இற்றைக்கு 50 வருடங்களுக்கு மேலாகிறது. இப் பள்ளிவாசல் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்தில் 1971.10.16ம் திகதி R/113/AM/67 இலக்க பதிவின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப் பள்ளிவாசலின் நாலாபக்க சுவர்கள் வெடிப்புற்ற நிலையிலும், மழைக்காலங்களில் மேற்கூரையினால் பள்ளிவாசலினுள் நீர் வடிதலுமாகவுள்ளது. இதனால் இறை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவோருக்கு மிகுந்த அசௌகரியங்கள் ஏற்படுகிறது.

மேலும் ஜும்ஆ தினங்களில் தொழுகைக்கு கட்டிட இடப்பரப்பு போதாத நிலையில் ஜமாத்தினர் வெளிவாசலில் தொழக்கூடிய நிலையும் உள்ளது.

மஜீட்புர கிராம மக்கள் இப் பள்ளிவாசலை விட்டு வேறு பள்ளிவாசலுக்கு செல்வதாயின் 12 கிலோ மீட்டர் துாரம் செல்ல வேண்டியுள்ளது.

இந் நிலையினை கருத்தில் கொண்டுள்ள இப்பள்ளிவாசல் நிர்வாகமும், ஊர் ஜமாத்தினரும் ஒன்றிணைந்து புதிய பள்ளிவாசல் கட்டுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய தற்போதுள்ள பள்ளிவாசல் கட்டித்தினை பின்புறமாக உடைத்து இவ் ஊர் மக்களின் பங்களிப்புடன் புதிய பள்ளிவாசலின் ஒரு பகுதிக்கு 23 கம்பிக் கூடுகள் நிறுத்தப்பட்டு அதற்கான அடிமட்ட பேஸ் இட்டும், பள்ளிவாசலின் நீளப்பகுதியில் 50 அடியும் அகலம் 55 அடியும் கொண்டுள்ள அத்திவாரமும் இடப்பட்டுள்ள நிலையில் உள்ளது.

இப் பள்ளிவாசலுக்கு எதுவிதமான அசையா சொத்துக்களும் இல்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

எனவே இப்பள்ளிவாசலின் தற்போதைய நிலையினை தாங்கள் நேரடியாக பார்வையிட்டு தங்களால் முடியுமான உதவிகளை செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

பள்ளிவாசல் வங்கிக் கணக்கு இலக்கம் - 

இலக்கம் - 064100220000348, மக்கள் வங்கி, சம்மாந்துறைக் கிளை.

நிர்வாகம்.

மஜீட்புர ஜும்ஆ பள்ளிவாசல்.





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe