Ads Area

தலைமுடியில் மறைத்து தங்கம் கடத்திய விவகாரத்தில் இலங்கையிலிருந்து சென்னை சென்ற 3 பெண்கள் கைது.

சென்னை,

சென்னை விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை சோதனை செய்யும் பணியில் சுங்க இலாகா அதிகாரிகள் ஈடுபட்டு வந்தனர். அப்போது இலங்கையில் இருந்து வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பெண்களின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, அவர்களின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதில் அந்த பெண்கள் தலையில் சவுரி முடி வைத்து அதன் உள்ளே தங்கத்தை மறைத்து கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் 525 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 22 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. 

அந்த பெண்களின் உள்ளாடையையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். அதில், சின்ன சின்ன பாக்கெட்டுகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தங்கப்பசைகள் மறைத்து வைத்திருந்ததையும் கண்டுப்பிடித்தனா்... 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.. அந்த தங்கத்தின் மதிப்பு மொத்தம் 525 கிராம் என்கிறார்கள்.. அதாவது ரூபாய் 23 லட்சம் இருக்குமாம்.. அவ்வளவு மதிப்பு வாய்ந்த தங்கத்தைதான் தலைமுடியிலும், உள்ளாடையிலும் மறைத்து வைத்து வந்துள்ளனர்..!

இதையடுத்து சம்பந்தப்பட்ட 3 பெண்களும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe