சம்மாந்துறை பிறப்பிடமாகக் கொண்ட ஆதம்பாவா - பாத்தும்மா தம்பதியினரின் புதல்வரான ஜனாப் ஏ.மன்சூர் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை சம்மாந்துறை தாருல் உலூம் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை சம்மாந்துறை மத்திய மகா வித்தியாலயத்திலும் கற்றுத்தேர்ந்தார். தனது பல்கலைக் கழக கல்வியை யாழ்ப்பாண பல்கலைக்கழகம் கற்று B.B.A பட்டதாரியானார். அத்துடன் தனது முதுமாணிப் பட்டத்தையும் MA (Public Administration) பட்டப்படிப்பினையும் பூர்த்தி செய்தார்.
இலங்கை நிர்வாக சேவையில் 1991இல் இணைந்து கொண்ட ஜனாப் A.மன்சூர் அவர்கள் இலங்கை நிர்வாக சேவையில் சிரேஷ்ட மூத்த அதிகாரியாவர். தனது முதல் நியமனமாக சம்மாந்துறை பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இவர் பொத்துவில், கல்முனை, சாய்ந்தமருது போன்ற பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளதுடன் அம்பாறை மாவட்ட, திருகோணமலை மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
இதன்பின் 2007 - 2017 காலப்பகுதியில் சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றி 2010 இல் SLAS (Special Grade) தரத்தினை அடைந்ததும் 2017 முதல் நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக நியமனம் பெற்று பின் கைத்தொழில் அமைச்சின் மேலதிக செயலாளராக கடமை ஏற்று அதன் பின் பொது நிர்வாக அமைச்சுக்குள் உள்வாங்கப்பட்டார்.
01.02.2022 ஆம் திகதி அன்று கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களால் வழங்கப்பட்ட நியமனத்தின் படி பிரதி பிரதம செயலாளராக (பொது நிர்வாகம்) நியமனம் பெற்றுள்ளார். இவர் இலங்கை நிர்வாக சேவையில் விசேட தர அதிகாரி என்பதுடன் 31 ஆண்டுகள் இலங்கை நிர்வாக சேவைக்குள் தன்னை அர்ப்பணித்தவராவார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாப். A.மன்சூர் அவர்கள் மென்மேலும் பல உயர்வுகளைப் பெற்று உன்னத பணியாற்ற வாழ்த்தி வல்ல இறைவனை பிரார்த்திதுகொள்கின்றோம்.
