13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இந்தோனேசிய ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய மேற்கு ஜாவாவில் உள்ள பாண்டுங் மாவட்ட நீதிமன்றம், 13 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அவர்களில் 8 பேர் கருவுற்ற வழக்கில் ஹெர்ரி வைரவன் என்ற ஆசிரியர் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைத்து சிறுமிகளும் மைனர்கள் எனவும் அவர்களில் பலர் ஏழைக் குடும்பங்களில் இருந்து பாடம் கற்க வந்தவர்கள் என்றும் மற்றும் உதவித்தொகையின் அடிப்படையில் பள்ளியில் படித்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய கல்வியினை போதிக்கும் ஆசிரியராகவும், பராமரிப்பாளராகவும் இருந்து வந்த குற்றவாளியான ஆசிரியர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் அங்கு கல்வி கற்று வந்த சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இவரால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி கருவுற்றிருந்த நிலையில் இது குறித்து சிறுமியின் பெற்றோர் முறைப்பாடு செய்ததன் காரணமாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவையே உலுக்கிய இச் சம்பவத்திற்கு இந்தோனேசிய மக்கள், மற்றும் அமைப்புக்கள் கொந்தளித்து வருகின்றனர்.
கடந்த மாதம், இந்தோனுசிய லூகாஸ் லக்கி நகல்ங்கோலா என்ற கத்தோலிக்கப் பாதிரியார், ஜகார்த்தாவின் புறநகர்ப் பகுதியில் அனாதை இல்லத்தை நடத்திவந்தார், அவரது பராமரிப்பில் உள்ள குழந்தைகளை அவர் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததற்காக 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமையும் குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.arabnews.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.