Ads Area

சவுதி அரேயாவை விட்டு வெளியேறுவோர் மற்றும் வருவோர் தொடர்பில் சவுதி அரசு வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

சவூதி அரேபியா இன்று வியாழக்கிழமை புதிய பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது இந்தப் பயணக்கட்டுப்பாடுகள் இம்மாதம் (பிப்ரவரி) 9ம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது.

சவுதியின் உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிவித்தலின் படி பிப்ரவரி 9ம் திகதி முதல் சவுதி அரேபியாவை விட்டு வெளியே பயணிக்கும் அனைத்து சவுதி குடிமக்களும் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் எடுத்திருக்க வேண்டும் எனவும் அதே போல்  குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட அனைவரும் சவுதிற்குல் உள் நுழையும் போது அவர்கள் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன்பு எதிர்மறையான PCR முடிவு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன்னர் 72 மணி நேரத்திற்கு முன்னர் எதிர்மறையான PCR முடிவு பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 48 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe