சம்மாந்துறை அன்சார்.
சம்மாந்துறை பிரதேச சாலம்பக்கேனி, சொறிக்கல்முனை பிலால் ஜும்மா பள்ளிவாலுக்கு தரையோடுகள் வழங்கி வைக்கப்பட்டு, அதன் வேலைகள் பூரண்படுத்தப்பட்டு தற்போது அதனை தொழுகையாளிகளின் பாவனைக்காக ஒழுங்குபடுத்தும் நிகழ்வு இன்று சாலம்பக்கேனி, சொறிக்கல்முனை பிலால் ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
சாலம்பக்கேனி, சொறிக்கல்முனை பிலால் ஜும்மா பள்ளிவாசலானது பிரதான வீதியில் அமைந்துள்ளமையினால் அங்கு அதிகமான தொழுகையாளிகள் வந்து செல்லும் நிலையில் அப்பள்ளிவாசலின் பெண்கள் தொழுகும் பகுதியானது நீண்டகாலமாக தரையோடுகள் பதிக்கப்படாது இருந்து வந்துள்ளது. இதன் தேவையினை உணர்ந்த பள்ளிவாசல் நிர்வாகத்தினர் பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டுவரும் சகோதரர் அஸ்மி யாசீன் (ஆசிய அபிவிருத்தி வங்கி) அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க அஸ்மி யாசீன் அவர்களின் ஏற்பாட்டினால் ஒரு தொகுதி தரையோடுகள் வழங்கப்பட்டு தற்போது அதன் வேலைகளும் பூரணப்படுத்தப்பட்டு பாவனைக்கு தயாராகியுள்ளது.
பூரணப்படுத்தப்பட்ட குறித்த வேலைத்திட்டத்தினை பார்வையிடுமாறு பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் அஸ்மி யாசீன் அவர்கள் பள்ளிவாசலுக்கு சென்று அதனைப் பார்வையிட்டு நிர்வாகத்தினரிடமும் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இந் நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் ஏ.எல். நஜிமுடீன், பொருளாளர் கைதர் அலி (பிரதிக்கல்விப் பணிப்பாளர்), செயலாளர் எம்.எம் முபாறிஸ், எஸ்.ஏ. ஜிப்ரி (கணக்காளர்), ஐ.எச். அக்ரம் (பொறியியலாளர்) ஐ.எல்.ஏ. முனாப் மௌலவி, அங்கத்தவர் ஜலீல் மற்றும் பள்ளிவாசல் நிர்வாக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
