Ads Area

உபவேந்தர் தலைமையில் Toast Masters International நிறுவனத்தின்-2021/2022 ஆண்டுக்கான புதிய நிறைவேற்று உறுப்பினர்களின் அங்குரார்ப்பண நிகழ்வு.

 நூருல் ஹுதா உமர்

ஜனாதிபதி அவர்களுடைய "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை அமுல்படுத்தும் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக் கருவில் உருவான பல்கலைக்கழகத்திற்கும், சமூக கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பினை இணைத்தலின் (11 ) அங்கமாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இன்றைய தினம்  (19) முற்பகல் தென்கிழக்குப் பல்கலைக்கழக வளாக மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சர்வதேச Toastmasters நிறுவனத்தை பற்றி  கருத்துதெரிவிக்கையில்;

Toast Master இன்டர்நேஷனல் நிறுவனமானது,1924இல் உருவாகியது. இன் நிறுவனம் அமெரிக்காவை தலைமை மையமாக கொண்டு இயங்குகின்து.  தலைமைத்துவம், பேச்சுத்திறமை போன்றவற்றையும் மேம்படுத்துகின்ற நோக்கில் இயங்குகின்ற கல்வி நிறுவனமாகும். இந் நிறுவனமானது 150 க்கும் மேற்பட்ட நாடுகளில் தமது கழகங்களை கொண்டுள்ளதுடன், இலங்கையில் 200க்கும் மேற்பட்ட கழகங்களை கொண்டு காணப்படுகிறது. ஆனால்  கிழக்கிலங்கைக்கு 2019 இல் இருந்து அறிமுகமானதுடன், தற்போது மூன்று கழகங்கள் காணப்படுகின்றன.

இம் மூன்று கழகங்களாவன அம்பாறை (  Ampara Toastmasters Club), மட்டக்களப்பு (Batticaloa Toastmasters Club), தென்கிழக்கு (South Eastern Toastmasters Club) ஆகும். என குறிப்பிட்டார். இந்நிகழ்வின் இறுதியில் Toastmasters International நிறுவனத்தின்-2021/2022 ஆண்டுக்கான புதிய நிறைவேற்று உறுப்பினர்களுக்கு நியமனங்கள் கையளிக்கும் நிகழ்வுகள் உபவேந்தர் அவர்களது தலைமையில் இடம்பெற்றன. Toastmasters International நிறுவனத்தின் இலங்கைக்கான உயர்அதிகாரி, மற்றும் நிருவாகச் சபையின் உறுப்பினர்கள் இணைந்து உபவேந்தர் அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றைக் கையளித்தனர்.

இன்நிகழ்வுக்கு கெளராவ அதிதியாக Toastmasters - Sri Lanka வின் (District 82) இலங்கைக்கான உயர் அதிகாரிகள், பல்கலைக்கழக பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.








Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe