தகவல் - சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு அமீரக அபுதாபியில் நடாத்தப்பட்டு வரும் மிகப் பிரபலமான பிக் டிக்கெட் குழுக்களில் குவைத்தில் தாதியாக பணிபுரியும் இந்தியா கேரளாவைச் சேர்ந்த சவிதா நாயர் என்ற பெண் ஒருவர் 250,000 திர்ஹம் பணப்பரிசு தொகையினை வென்றுள்ளார்.
இது தொடர்பில் சவிதா நாயர் தெரிவிக்கையில்,
பிக் டிக்கெட்டில் 250,000 திர்ஹம்ஸ் பரிசுத் தொகையைப் பெற்றதைப் பற்றி பிக் டிக்கெட் டிரா அதிகாரிகள் எனக்கு அழைப்பு விடுத்து தான் வெற்றி பெற்றதனை கூறிய போது என்னால் நம்ம முடியாமல் இருந்தது. அவர்களின் எதிர்பாராத தொலைபேசி அழைப்பால் நான் ஆச்சரியப்பட்டேன். ஆரம்பத்தில் 2,500 திர்ஹம் வென்றதாகவே நினைத்தேன் ஆனால் நான் இந்த வாரத்தின் 250,000 திர்ஹம் பரிசுத் தொகையை வென்றுள்ளேன் என தொகுப்பாளர் கூறியபோது மகிழ்ச்சியடைந்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
சவிதா நாயர் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பிக் டிக்கெட் வாங்கி வருவதாகவும் டிராவுக்கு ஒரு நாள் முன்புதான் வெற்றிக்கான டிக்கெட்டை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
