தகவல் - இர்பான்.
சம்மாந்துறை நெய்னாகாடு பள்ளாத்து பாலத்து பகுதியில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதனால் அப் பகுதியில் போக்குவரத்தில் ஈடுபடும் விவசாயிகள் மிக அவதானமாக பயணம் செய்யுமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
பாரிய முதலைகள் பள்ளாத்து கரைகளிலும், பாலம் போன்ற வெளிப் பகுதிகளிலும் அதிகமாக வந்து செல்வதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வீதிகளில் கூட முதலைகள் உலா வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
சம்மாந்துறையில் தற்போது வேளாமை அறுவடை நடைபெற்றுக் கொண்டிருக்கும் இச் சூழ்நிலையில் விவசாயிகள் இரவு நேரங்களில் குறித்த பகுதிகளினுாடாக பயணம் செய்யும் போது முதலைகள் விடையத்தில் மிக அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றீர்கள்.
விழிப்புணர்வு கருதி இச் செய்தியினை அதிகம் அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள்.