சவூதி அரேபியாவிலுள்ள ஸ்பானிய ரயில் நிறுவனமான ரென்பே, 30 ரயில் சாரதி பணிகளுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. மேற்படி 30 பதவிகளுக்கு சுமார் 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளனர் என ரென்பே நிறுவனம் தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்படுவோர் புனித மக்கா மற்றும் மதீனா நகரங்களுக்கு இடையிலான அதிவேக ரயில்களை இயக்குவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் ரயில் சாரதி பதவிகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.
முடிக்குரிய இளவரசர் மொஹம்மத் பின் சல்மான் மேற்கொண்டுவரும் மாற்றங்களின் விளைவாக பெண்கள் வாகனம் செலுத்த அனுமதி வழங்கப்படுகிறது.
இதேவேளை, கல்வித் தகைமை மற்றும் ஆங்கில அறிவு முதலான இணைய வழி மதிப்பீடுகளின் மூலம் மேற்படி 28,000 பேரின் எண்ணிக்கையை அரைவாசியாக குறைக்க முடிந்ததாக ரென்பே நிறுவனம் நேற்றுமுன்தினம் தெரிவித்துள்ளது.
மார்ச் நடுப்பகுதி வரை தேர்வு நடவடிக்கைகள் தொடரும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://saudigazette.com.sa