Ads Area

சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகளின் ஆடையுரிமை மீறலை விசாரிக்க கிழக்கின் கேடயம் ஜனாதிபதியிடம் கோரல்.

 


நூருள் ஹுதா உமர்

ஜனாதிபதியின் 74 வது சுதந்திரதின உரையில் இந்தநாட்டில் தனிநபர்களினதும் இனம் மதம் ரீதியிலான உரிமைகளை இந்த அரசாங்கம் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் பாதுகாத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார் 

ஆனால் திருகோணமலை சண்முகா பாடசாலையில் முஸ்லிம் மாணவிகள் தமது பர்தாவினையும் ஜீன்ஸ்னையும் கழற்றி வைத்துவிட்டே வகுப்பறைகளுக்கு அனுப்பப்படுவதாக திருகோணமலை கள விஜயத்தின்போது அறிந்துகொண்டதாகவும் இதுதொடர்பில் உண்மைத்தன்மையினை கண்டறிந்து தவறு இழைத்தவர்களுக்கு உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிடுமாறும் கிழக்கின் கேடயம் சார்பில் தலைவர் எஸ் எம் சபீஸ் கையெழுத்திட்ட  எழுத்துமூல கடிதம் அனுப்பப்பட்டுள்ளது 

இந்த பாடசாலைக்கு அங்கு காணப்படும் ஏனைய பாடசாலைகளையும்விட அதிகளவான பௌதிகவளங்கள் அதிகாரத்தில் உள்ளவர்களால் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe