(சர்ஜுன் லாபீர்)
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபராக அண்மையில் புதிதாக பதவியேற்ற ஜே.எம் ஏ டக்லஸ் அவர்களை கல்முனை வர்த்தக சங்கத்தினர் நேற்று(15) பாராட்டி கெளரவித்தனர்.
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இடம்பெற்ற Moon Gloaming ஒன்று கூடல் நிகழ்வின் போது இக் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ டக்லஸ் அவர்களுக்கு தங்க நாணயம் மற்றும் நினைவுச் சின்னம்,பொன்னாடை ஆகியன வழங்கப்பட்டு மிக விமரிசையான முறையில் இக் கெளரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
இக் கெளரவிப்பு நிகழ்வானது கல்முனை வர்த்தக சங்கத்தின் தலைவர் கே.எம்.சித்தீக் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக கல்முனை வர்த்தக சங்கத்தின் பிரதித் தலைவர் எஸ்.எம் ஜின்னா, பொருளாளர் பி.எம் ஜலீல், செயலாளர் எஸ்.எல் ஹமீட் உப பொருளாளர் யூ.எல் பைசால் ஆகியோர் கலந்து கொண்டு கெளரவித்தனர்.
அதேவேளை இந் நிகழ்வில் கல்முனை மாநகர மார்கட் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் மாவட்ட அரசாங்க அதிபருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.
கல்முனை வர்த்தக சங்கத்தினர் பொது சேவைகள், சமூக நல விடயங்கள் மற்றும் இடர் அனர்த்த உதவிகள் என பலதரப்பட்ட சேவைகளை செய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.