திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் அபாயா அணிந்து வந்தமைக்காக முஸ்லிம் ஆசிரியை இனவாத, பயங்கரவாத சிந்தனை கொண்டோரால் தாக்கப்பட்ட மனிதாபிமானமற்ற செயலை கண்டித்து ஐக்கிய காங்கிரஸ் கட்சியினால் மன்னாரில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடை பெற்றது.
ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் சித்தீக் முஹம்மத் சதீக் தலைமையில் நடந்த இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் பின்வரும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
திருகோணமலை சன்முகா வித்தியாலயத்தில் அபாயா அணிந்த ஆசிரியை தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்.
திருகோணமலை சண்முக வித்தியால பயங்கரவாதத்துக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முன்னர் எல் ரி ரி ரி பயங்கரவாதம் இப்போது தமிழ் பாடசாலை பயங்கரவாதமா?
இதேவேளை இத்தாக்குதலை கண்டித்து தமது கட்சியினால் தேசிய மட்டத்தில் மேலும் பல பிரதேசங்களில் அமைதியான ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
