நேற்று (02. 02. 2022) சண்முக வித்தியாலயத்திற்கு கடமையேற்கச் சென்ற ஆசிரியையான பஹ்மிதா அவர்கள் தாக்கப்பட்டு தற்பொழுது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தௌபீக் அவர்கள் நேரடியாக சந்தித்ததுடன் இச்சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்குறிய முன்னெடுப்புக்கள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இது சம்மந்தமாக திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரையும் அவருடைய அலுவலகத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
