சம்மாந்துறை நாபீர் பௌண்டேஷனினால் சம்மாந்துறை யுனிட்டி விளையாட்டுக் கழக வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம் பெற்றது.
நபீர் பௌண்டேசன் நிறுவனத்தின் ஸ்தாபகரும் பொறியியலாளருமான கலாநிதி அல் - ஹாஜ் உதுமான் கண்டு நாபீர் அவர்களின் தலைமையில் , இடம் பெற்ற இந் நிகழ்விலேயே வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
விளையாட்டு வீரர்களை சந்தித்து கலந்துரையாடிய உதுமான்கண்டு நாபீர் அவர்கள் இளைஞர்களின் விளையாட்டு ஆர்வத்தினை கண்டு பாராட்டியதோடு அவர்களை ஊக்குவிக்க தன்னால உதவிகளை செய்வதாகவும் வாக்குறுதியளித்தார்.