-அஷ்கி அஹமட்
சம்மாந்துறை வாழ் வறிய குடும்பங்களிற்கு வீடு கட்டமைக்கும் "2030 இல் யாவருக்கும் உறையுள்" எனும் திட்டம் கடந்த ஆண்டு சமூக சேவையாளர் அஸ்மி யாசீன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
அதன் அடுத்த கட்டமாக சம்மாந்துறை பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட வறிய நிரந்தர வசிப்பிடம் அற்ற குடும்பம் ஒன்றிற்கு கடந்த (18.பெப்) வெள்ளிக்கிழமை வீடு கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய அஸ்மி யாசீன் அவர்கள்,
"2030 இல் யாவருக்கும் உறையுள்" எனும் திட்டம் எனது கனவுத் திட்டம். எமதூரின் முன்னேற்றம் குடிமக்களின் வாழ்க்கை மேம்படுத்தலில் உள்ளன. ஆனால் நிரந்தமான ஏதுமின்றிய மக்களைக் கொண்டு மேம்படுத்த முடியாது. கடந்த பல ஆண்டுகளாக சம்மாந்துறை மக்களின் வாழ்வாதாரம் பின்னோக்கிய நிலைகளில் உள்ளன.
பல தரவுகளை அலசி, ஆராயும் போது பல திடுக்கிடும் தகவல்கள் அறியக்கிடைத்தன. கடந்த காலங்களின் மக்களின் அத்தியாவசியம் பூர்த்தி செய்துள்ளோம், ஆனால் மிக அத்தியாவசியம் உறையுள், நிரந்தர உறையுள் இல்லாமல் பல அசெளகரீகங்களை எமது மக்கள் எதிர்நோக்கி வருகின்றனர்.
இவற்றையெல்லாம் கருதிக் கொண்டே இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் ஆரம்ப கட்டம் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் இன்னும் பல முயற்சிகளை இம்மக்களுக்காக செய்யவுள்ளேன்."
- என தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.
இந்நிகழ்வில் பல முஸ்கியஸ்தர்களும், OCD அமைப்பின் உறுப்பினர்களும் கலந்து கொண்டு, அஸ்மி யாசீன் அவர்களால் வீடு கையளிக்கப்பட்டது.