முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MIM மன்சூர் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு விஜயம். (2022.02.18)
தற்போதைய அரசாங்கத்தினால் அண்மையில் புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு உருவாக்கப்பட்டு, அவ் ஆணைக்குழுவினால் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குதல் தொடர்பான பிரேரணைகள் கோரப்பட்டுள்ள சூழலிலேயே இவ் விஜயம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 2022.02.18 ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்கு விஜயம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் MIM மன்சூர் அவர்கள் பிரதேச செயலாளர் SLM. ஹனீபா அவர்களை சந்தித்து புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு எதிர்பார்க்கின்ற பிரேரணைகள் எவ்வாறானவைகள் என்பது தொடர்பாகவும், ஏற்கனவே எல்லை நிர்ணயம் தொடர்பில் சம்மாந்துறைக்கு இடம்பெற்றுள்ள மிகப்பெரும் துரோகத்தை, தவறை நிவர்த்திக்க முடியுமா என்பது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளதாக அறியக் கிடைத்தது.
கடந்த 2013 ஆம் ஆண்டு அதாவது மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் உள்ளூராட்சி நிறுவனங்களின் தேசிய எல்லை நிர்ணய ஆணைக்குழுவினால் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான வட்டார எல்லைகளை வரையறை செய்வதற்கான பிரேரணைகள் கோரப்பட்டிருந்தமை யாவரும் அறிந்ததே.
அதற்கமைய அப்போது சுகாதார அமைச்சராக இருந்த MIM மன்சூர் அவர்கள் மாத்திரமன்றி பல பொது அமைப்புக்களும் தங்களது பிரேரணைகளை குறித்த ஆணைக்குழுவிடம் கையளித்திருந்த போதும் அப்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளரும்
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைப்பாளராகவும் இருந்த AMM. நௌஷாட் அவர்களினால் கையளித்திருந்த பிரேரணையே கவனத்தில் கொள்ளப்பட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரத்துடன் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்ட கதை யாவரும் அறிந்ததே.
புத்திஜீவிகள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் இணைந்து கையளித்த அனைத்து பிரேரணைகளும் நிராகரிக்கப்பட்ட நிலையில், எவருடைய ஆலோசனைகளும் பெறப்படாது தன்னந் தனியாக இருந்து தயாரித்து,சகோதரர் நௌஷாட் அவர்களால் முன்மொழியப்பட்ட பிரேரணை மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டு சட்டமாகியும் உள்ளது.
தான் வகித்த ஐ.ம.சு.முண்ணணியின் அமைப்பாளர் பதவியின் அதிகாரத்தைக்கொண்டு அனைத்து பிரேரணைகளையும் புறம்தள்ளி தனது பிரேரணையை வென்றெடுத்த பெருமையை,சகோ. நௌசாட் அவர்கள் அன்று பெற்றிருந்தனர்.
ஒரு சமுகம் சார்ந்த எந்தவொரு முக்கியமான தீர்மானத்தையும் தனியொருவராகவிருந்து தீர்மானிக்கும் திறமையை யாரேனும் கொண்டிருந்தாலும் கூட,குறித்த தீர்மானத்தில் தவறேதும் நேர்ந்துவிடக்கூடாது என்ற கவலையில் குறித்த தீர்மானம் தொடர்பான பரந்துபட்ட ஆலோசனைகளைப் பெற்று இறுதித் தீர்மானத்தை எட்டுவதே வழக்கத்திலுள்ள நியமமும் நடைமுறையுமாகும்.
இருப்பினும் அவைகள் எதனையும் பொருட்படுத்தாது தான் தலைமை வகிக்கும் பிரதேச சபை உறுப்பினர்களுடனாவது கலந்தாலோசிக்காது எடுத்த முடிவானது,அவரது கேவலமான அகங்காரத்தையும் மிகப்பெரும் முட்டாள் தனத்தையும் பறைசாற்றுவதுடன்,காலத்தால் வென்றெடுக்க முடியாத காட்டிக்கொடுப்பையும் செய்துள்ளது. எனவேதான் தற்போது நியமிக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழுவிற்கு கையழிக்கவுள்ள புதிய பிரேரணைமூலம் இப்பெரும் குறையை திருத்திக்கொள்ள முடியுமா அல்லது மொத்தமாக கைசேதப்பட நேர்த்திடுமோ என்ற கவலையிலேயே சகோ.மன்சூர் குறித்த சந்திப்பை மேற்கொண்டுள்ளதாக அறியக்கிடைத்தது.
ஊகடப் பிரிவு.