சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் யாராவது பிச்சையெடுத்தால் அவர்களுக்கு மூன்று மாத சிறை மற்றும் 5,000 திர்ஹம்கள் அபராதம் விதிக்கப்படும் என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எச்சரித்துள்ளது.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய குற்றங்கள் மற்றும் தண்டனைகள் சட்டம் தொடர்பான சட்ட எண். 31 இன் 2021 இன் பிரிவு 475 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி பிச்சை எடுக்கும் போது யாராவது பிடிபட்டால் அவர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிறருக்கு பரிதாபத்தை ஏற்படுத்தும் வகையில் நடித்து ஏதேனும் ஏமாற்று முறையைப் பயன்படுத்தி பிச்சையெடுப்பது அல்லது காயம்பட்டதாகவோ அல்லது நிரந்தர ஊனமுற்றவனாகவோ நடித்து பிச்சையெடுப்பது கண்டறியப்பட்டால் அத்தகையவர்கள் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்க விடுக்கப்பட்டுள்ளது.