ஏ.சி. ரியாஸ்.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பணிப்புரையின் பேரில் பொது நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான ஒரு நாள் பயிற்சி பட்டறை.
ஜனாதிபதி அவர்களுடைய "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைப் பிரகடனத்தை அமுல்படுத்தும், உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய எண்ணக் கருவில் உருவான பல்கலைக்கழகங்களுக்கும், சமூக கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பினை இணைத்தலின் (10ம்) அங்கமாக.
நூலகர் எம். எம். றிபாயுடீன் தலைமையில் நடைபெறும் இவ் பயிற்சி பட்டறை ஆரம்ப நிகழ்வு இன்று (17) முற்பகல் பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக
உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
உபவேந்தர் கருத்து தெரிவிக்கையில்:
சமூக மாற்றத்தை எதிர்கொள்ளும் புத்திஜீவிகளை கல்வியினூடாக உருவாக்க வேண்டுமென்றும்,
தற்கால நவீன சவால்களை எதிர்நோக்க கூடிய வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்க வேண்டுமென்றும், பல்கலைக்கழகத்தை சமூகங்களில் தொடர்புபடுத்தல் வேலைத்திட்டத்தின் கீழ் துறைசார்ந்த இவ்வாறான பயிற்சிப் பட்டறைகள் கருத்தரங்குகள், வழிகாட்டல்கள், ஆலோசனைகள் போன்றவை சமகாலத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.
நிகழ்வின் இறுதியில் பொத்துவில் பிரதேச சபைத் தலைவர் றஹீம் அவர்களுக்கு, தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களுடைய பொற்கரங்களால் பாலர் பாடசாலைக்குரிய புத்தகங்களை கையளிக்கும் நிகழ்வுகள் உபவேந்தர் தலைமையில் இடம்பெற்றன.
மேலும் இந்நிகழ்க்வுக்கு வளவாளர்களாக , தென்கிழக்குப் பல்கலைக்கழக நூலகர், மற்றும் சிரேஷ்ட உதவி நூலகர்கள் சிறப்புரையாற்றினர்.
குறித்த இன்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபைக்கு உட்பட்ட நூலகர்கள், நூலக பணியாளர்கள் மற்றும் பாலர் பாடசாலை ஆசிரியர்கள், பொதுமக்கள்,மற்றும் மாணவர்கள் ஆகியோர் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.