சம்மாந்துறை அன்சார்.
ஐக்கிய அரபு இராஜ்ஜிய சார்ஜாவில் உள்ள அல்-நஹ்தாவில் கட்டிட காவலாளி ஒருவர் மீது இனவெறி கருத்துக்களையும், அவரது மத அனுஸ்டானங்களையும் விமர்ச்சித்த அரபி பெண் ஒருவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த அரபிப் பெண் பாதிக்கப்பட்ட கட்டிட காவலாளி தனது வழிபாட்டு கடவுளை பூஜை செய்து கொண்டிருந்த போது அவரை அனுகி அங்குள்ள ஒரு அறையின் கதவினை உடைக்கச் சொல்லியுள்ளார். காவலாளி கதவுகளை உடைக்க தனக்கு அதிகாரம் இல்லை என கூற அங்கிருந்து திரும்பிச் சென்ற அப் பெண் ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வந்து அந்தக் காவலாளியை தாக்கி துன்புறுத்தி உள்ளார்.
மேலும் காவலாளியை அப் பென் பின்னாள் இருந்து தள்ளி விட்டு அவரது மதத்தை (சின்னங்களை) அவமதித்து, அவருக்கு எதிராக இனவெறியைப் பயண்படுத்தியும் உள்ளார்.
தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து காவலாளி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார் அப் பெண்னை கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்...குறித்த வழக்கு விசாரனையில் தனது குற்றங்களை ஒப்புக் கொண்ட அப் பெண்னுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.