13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததற்காக சிறுமியின் மாற்றாந்தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். தென்னை நார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் 27 வயதுடைய சந்தேக நபரையே சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிறுமியின் 36 வயதான தாயும் தென்னை நார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் தந்தையின் மரணத்தின் பின்னர், அவரது தாயார் சந்தேக நபருடன் காதல் உறவில் ஈடுபட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் அந்த நபர் தன்னை அவ்வப்போது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக அந்தச் சிறுமி பொலிஸில் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.