கச்சா எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காக ரஷ்யாவிடம் இருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளதாக ஹிருநியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை தற்போது பாரிய வெளிநாட்டு நாணய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது.
ரஷ்யாவிடம் விடுத்த கடன் கோரிக்கை ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிப்பதற்கு முன்னரோ அல்லது அதற்குப் பின்னரோ என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இதேவேளை, கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் தலைமையிலான ரஷ்ய வர்த்தகக் குழு இந்த வாரம் இலங்கைக்கு விஜயம் செய்தது. ரஷ்யாவில் நடைபெறவுள்ள எக்ஸ்போ 2030 க்கான ஆதரவுக்காகவும் இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திப்பதற்காகவும் இக் குழுவின் வருகை அமைந்தது.
ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா வாக்கெடுப்பின் போது இலங்கை வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.