Ads Area

"சீரழிந்த தாயகத்தைக்கட்டியெழுப்பும் தீர்வு" நிகழ்ச்சி : நாளை சாய்ந்தமருதில் உரையாற்றுகிறார் அனுரகுமார !

 (நூருல் ஹுதா உமர்)

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் தலைவர் அனுர குமார திசாநாயக நாளை வெள்ளிக்கிழமை கல்முனைப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்து சாய்ந்தமருது லீ மெரீடியன் வரவேற்பு மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ள "சீரழிந்த தாயகத்தைக்கட்டியெழுப்பும் தீர்வு" எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இவர் உரையாற்றவுள்ளார்.

நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெற்று வரும் நிகழ்வின் ஒருபகுதியாக நடைபெறவுள்ள இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாக தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியற்றின் ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe