தகவல் - சம்மாந்துறை அன்சார்.
துபாயில் கேரளாவைச் சேர்ந்த பிரபல சமூக ஊடக புகழ் ரிஃபா மெஹ்னு செவ்வாயன்று அல் ஜாஃபிலியாவில் உள்ள அவரது குடியிருப்பில் துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். 20 வயதான ரிஃபா மெஹ்னு இன்ஸ்டாகிராம், டிக்டொக், யூடுப் போன்றவற்றில் பிரபலமானவராவர்.
இரண்டு வயது மகன் மற்றும் கணவரோடு துபாயில் வசித்து வந்த ரிஃபா மெஹ்னாவே இவ்வாறு துாக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தற்போது அவரது உடலை கேரளாவின் கோசிகோட்டில் உள்ள அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவருடைய மரணம் தற்கொலையா அல்லது கொலையா என்ற ரீதியில் துபாய் காவல்துறையின் தடயவியல் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரிஃபா மெஹ்னுவுக்கு இன்ஸ்டாகிராமில் 300,000 க்கும் மேற்பட்ட பின்தொடர்பவர்கள் உள்ளனர். மேலும் இவர் 100,000 க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சேனலையும் நடத்தி வந்துள்ளார்.
அவரது கணவர் மெஹ்னாஸும் சமூக ஊடகங்களில் பிரபலமானவராவார். ரிஃபா மெஹ்னு மலையாளத்தில் அல்பம் பாடல்களும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.