இலங்கையில் நிலவும் எரிபொருள் மற்றும் மின்சார நெருக்கடியானது நாட்டின் சுற்றுலாத் துறையை கடுமையாகப் பாதித்துள்ளது.
தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் திட்டமிட்டபடி பயணிக்க எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் உள்ள பல சுற்றுலாப் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்த வாகனங்கள் நீண்ட தூர பயணங்களுக்கு போதுமான எரிபொருளைக் பெற்றுக் கொள்ள முடியாததால், தங்கள் பயணத் திட்டங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதேவேளை, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் தென் மாகாணத்தில் உள்ள சிறிய உணவகங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது இலங்கையில் உள்ள பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளவர்கள் நாட்டின் தற்போதைய நிச்சயமற்ற நிலைமை குறித்து சமூக ஊடக தளங்களில் கவலைகளை எழுப்பியுள்ளனர்.
கொழும்பின் பல பகுதிகளில் இன்று அதிகாலை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நாட்டிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களைச் சுற்றி விசேட பாதுகாப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் மா அதிபர் (IGP) அறிவுறுத்தியுள்ளார்.
விவசாயம், சுற்றுலா, தீயணைப்பு படை மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் தொடர்பான வாகனங்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் உத்தரவு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.