Ads Area

சம்மாந்துறையை பிரதிநிதித்துவப் படுத்தும் " Believe Start Sports Club " கழகத்தின் புதிய சீருடை மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்வு.


சம்மாந்துறையை பிரதிநிதித்துவப் படுத்தும் " Believe Start Sports Club " கழகத்தின் புதிய சீருடை மற்றும் வீரர்கள் அறிமுக நிகழ்வு நேற்று (மார்ச் 6)  இடம்பெற்றது. 

இவ் நிகழ்வில், அதிதிகளாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்fனான் ( YMP ) , அல் மர்ஜான் பாடசாலை விளையாட்டு பயிற்றுவிப்பாளர்  ரம்சான் , Believe Star கழகத்தின் முகாமையாளர் இல்ஹாம் என பலர் சுகாதார நடைமுறைகளை பேணி  கலந்து கொண்டனர். 

அதிதிகள் உரையில் அப்னான் அவர்களால் பல விடயங்கள் முன்வைக்கப்பட்டு கலந்தாலோசிக்கப்பட்டன. அவற்றுள் மைதான தேவைப்பாடு, வீரர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளும் முறைகளும், வாய்ப்புகள் பற்றியும் முக்கியமாக அலசப்பட்டன. 

மேலும் கடந்த காலங்களில் சம்மாந்துறை இளைஞர்கள் போதைவஸ்துக்கு அடிபணிந்திருப்பது மிகக் கவலையான விடயமாகும். இதனை நிவர்த்தி செய்ய / ஒழிக்க அனைத்து இளைஞர்களும் முன் வர வேண்டும் என பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டது. 





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe