Ads Area

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு.

டொலர் நெருக்கடி காரணமாக இலங்கையின் சில பகுதிகளில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ கேஸ் லங்காவினால் இறக்குமதி செய்யப்பட்ட எரிவாயு கொண்ட மூன்று கப்பல்கள் இலங்கையை வந்தடைந்த போதிலும், டொலர் நெருக்கடியின் காரணமாக எரிவாயுவை இறக்குமதி செய்ய் முடியவில்லை.

தற்போது லிட்ரோ கேஸ் தொழிற்சாலைகள் மற்றும் தகனங்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

இதேவேளை, தனியார் எரிவாயு விநியோக நிறுவனமான லாஃப்ஸ் கேஸ் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை முற்றாக இடைநிறுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டர்கள் தற்போது உள்ளூர் சந்தைக்கு விநியோகிக்கப்படுகின்றன, ஆனால் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இரண்டு முதன்மை எரிவாயு விநியோகஸ்தர்களான Litro Gas Lanka மற்றும் Laughfs Gas, எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாகத் தெரிவித்தன.

கடன் கடிதங்களை (LOC) திறக்க வங்கிகள் அனுமதிக்காததே இதற்குக் காரணம் என்று இரண்டு எரிவாயு இறக்குமதி நிறுவனங்களும் தெரிவித்ததாக Hiru Tv செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த வருடம், லாஃப்ஸ் கேஸ் தற்காலிகமாக தனது செயற்பாடுகளை இடைநிறுத்தியதையடுத்து இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டது.

செய்தி மூலம் - https://www.newswire.lk

தமிழில் - சம்மாந்துறை அன்சார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe