Ads Area

சீனாவை மட்டும் நம்பியுள்ள அரசால் டொலர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற முடியாது- பா.உ. இம்ரான் மகரூப் தெரிவிப்பு!

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

 சீனாவை மட்டும் நம்பியுள்ள அரசால் டொலர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற முடியாது என திருகோணமலை மாவட்ட நாடளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்.

திருகோணமலை கிண்ணியாவில் உள்ள மாகத் நகர் ஹமீதியா விளையாட்டு கழக மைதானத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் உரையாற்றும் போதே  இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்...

இந்த நாட்டில் கேஸ் இல்லை ,மின்சாரம் இல்லை வாகன இறக்குமதி இல்லை. இவை அனைத்துக்கும் மூல காரணம் நாட்டில் டொலர் இல்லை. டொலர் இல்லாமல் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படும் என்பதை நாம் 2020 ஆம் ஆண்டே பாராளுமன்றத்தில் தெரிவித்தோம்.

அப்போதே மாற்று வழிகளை தேடி இருந்தால் இந்த பிரச்சினைகளை கட்டுப்படுத்தி இருக்கலாம்.ஆனால் சீனாவை மட்டும் நம்பி சர்வதேசத்தை பகைத்துகொண்டிருக்கும் இந்த ஆட்சியாளர்களால் இதற்கான நிரந்தர தீர்வை பெற முடியாது.இதற்குரிய முடிவை வருகின்ற  தேர்தலில் மக்கள் வழங்குவார்கள்.

இந்த அரசை விரட்டி அடித்து மக்கள் விருப்பும் ஆட்சியை முன்னெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியை கொண்டுவருவார்கள்.

என்னால் முடிந்த உதவிகளை இம் மைதானத்துக்கு  மேற்கொள்வேன்.இது தொடர்பாக பிரதேச சபை தவிசாளரிடம் கலந்துரையாடி மிக விரைவாக நடவடிக்கையை மேற்கொள்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவ் விஜயத்தில்  கிண்ணியா பிரதேச சபை தவிசாளர்  நசீர்,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,இளைஞர்கள் என  பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe