கொழும்பிலிருந்து கல்முனைக்கு கொண்டு செல்லவதற்காக எடுத்து வரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளுடன் ஹபரணையில் வைத்து குறருநாகலயைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இராணுவப்புலனாய்வுப்பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கமைவாக ஹபரணை பொலிஸ் விசேட பிரிவோடு இணைந்து மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போதே இன்று காலை 11:00 மணியளவில் போதைப்பொருளுடன் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களிடமிருந்த 10 கிராம் அளவிலான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணையினை ஹபரண பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.