இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் ரத்து செய்யப்படலாம் என ஊடகங்களில் பரப்பப்படும் சில தவறான தகவல்களை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மறுப்பதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முற்றாக மறுப்பதாக தெரிவித்துள்ளது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு உச்சத்தை எட்டியதிலிருந்து, ஒரு வாரத்திற்கும் மேலாக தனது விமானப் பயண அட்டவணையை நிர்வகிக்க முடிந்ததாகவும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
எனினும் சில விமானங்களின் பயண நேரங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள போதிலும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது விமான பயண நேர அட்டவணையை 100 வீதமான செயல்திறனுடன் செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியான தருணத்தில் திட்டமிடப்பட்ட விமான பயண நடவடிக்கைகளுக்கு சிறிதளவும் இடையூறுகள் இல்லாமல் செயல்பட அனைத்துவிதமான முயற்சிகளையும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
செய்தி மூலம் - https://www.newswire.lk
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.