முஜாஹித் நிசார்.
இலங்கையில் கடந்த சில மாதங்களாக எரிபொருளுக்கு கடுமையான நெருக்கடி தட்டுப்பாடு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிலையம் முன்பு நீண்ட வரிசையில் மக்கள் நின்று கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது.
மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டி சேவையில் ஈடுபடமுடிய நிலை காணப்படுகின்றது.
இவ்வாறான ஒரு நிலையில் இன்றைய தினம் புத்தள நகரில் பிறந்த பிள்ளையை வீட்டிற்கு கொண்டு செல்ல வாகனமின்றி தாய் நடுவீதியில் நீண்ட நேரமாக நின்றிகொண்டிருந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.