Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் தாய்மார்களுக்கான பாலுட்டும் அறை (Lactating room) திறந்து வைப்பு

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் Diamond rainwear (pvt) Ltd நிறுவனத்தின் அனுசரனையுடன்  தாய்மார்களுக்கான பாலுட்டும் அறை (Lactating room)திறந்து வைக்கும் நிகழ்வு   பிரதேச செயலாளர் எஸ்.எல். முகம்மது ஹனீபா அவர்களின் தலைமையில் நேற்று  (28)  சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீசன் அவர்கள் கலந்து கொண்டதோடு  கெளரவ அதிதியாக Diamond rainwear (pvt) Ltd நிறுவனத்தின் செயலாளர் எஸ்.எம் நபீர் அவர்களும்

 அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் யு.எம். அஸ்லம், கணக்காளர் ஐ.எம் பாரிஸ், சமுர்த்தி தலைமைபீட முகாமையாளர் யு.எல்.எம் சலீம் ,சமூகசேவை உத்தியோகத்தர்கள், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக சேவை பிரிவின் ஏனைய உத்தியோகத்தகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.



 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe