சவுதி அரேபியாவின் மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம், சவுதிஅரேபியாவில் வசிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்து செயல்பாடுகளில் 50 சதவீத தள்ளுபடி உட்பட பல்வேறு சலுகைகளை அறிவித்தள்ளது.
இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதற்கான தஷிலாத் அடையாள அட்டைகளை, சவூதி டேட்டா மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆணையம், மாற்றுத்திறனாளிகள் ஆணையம் மற்றும் டிஜிட்டல் டிரான்ஸ்ஃபர்மேஷன் ஏஜென்சி ஆகியவற்றின் பிரதிநிதிகள் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் வெளியிடப்பட்டன.
மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தில் பதிவுசெய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகள், சவுதி குடிமக்கள் மற்றும் இக்காமா வைத்திருக்கும் வெளிநாட்டவர்கள் தஷிலாத் அட்டைப் பலன்களைப் பெற தகுதியுடையவர்கள் ஆவார்கள். பயணச்சீட்டு தள்ளுபடி அட்டை, தாசிலத் போக்குவரத்து பார்க்கிங் கார்டு மற்றும் ஆட்டிசம் அட்டை ஆகியவை தஷிலத் என்ற ஒற்றை அட்டையாக இணைக்கப்பட்டுள்ளன.
தஷீலத் கார்டு வைத்திருப்பவர்களுக்கு அரசு போக்குவரத்து அமைப்புகளில் 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும். மேலும், அரசு நிறுவனங்களில் அணுகலில் முன்னுரிமை, பார்க்கிங் உள்ளிட்ட பொது இடங்களில் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஆட்டிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிலையங்களில் முன்னுரிமையும், பொது இடங்களில் நடமாடுவதற்கு முன்னுரிமையும் தஷீலத் அட்டைகள் மூலம் வழங்கப்படும்.
தவகல்னா கித்மத் செயலி மற்றும் மனித வள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சக செயலி மூலம் தஷீலத் கார்டுகளை ஆன்லைனில் வழங்குவது நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஏற்கனவே டிக்கெட் தள்ளுபடி அட்டை, தஷீலத் டிராஃபிக் பார்க்கிங் கார்டு மற்றும் ஆட்டிசம் கார்டு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பெற்றவர்கள் புதிய தஷீPலத் கார்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. முன்னதாக இந்த அட்டைகளைப் பெறாதவர்கள், மனித வளம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில் உள்ள இ-சேவை இணைப்பு மூலம் தஷீலத் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும்.