தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரிக்கு சொந்தமான காணிகள் 2022/2023ம் ஆண்டு பெரும்போக விவசாய செய்கைக்காக நிபந்தனையின் அடிப்படையில் குத்தகைக்கு கொடுக்க தீர்மாணிக்கப்பட்டுள்ளது. காணிகளை குத்தகைக்கு பெறவிரும்புபவர்கள்
i.குத்தகைக்கு பெற விரும்பும் காணியினை நன்கறிந்தவாரயிருத்தல் வேண்டும்.
ii.காணியினை குத்தகைக்குப் பெறும்போது மதரஸாவினால் நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டு ஒப்பந்தம் மேற்கொண்டு குத்தகைக்கு காணிகள் வழங்கப்படும்.
எனவே காணிகளை நிபந்தனைகளின் அடிப்படையிலும் குத்தகைக்கு பெற விரும்புபவர்கள் மதரஸா அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து 2022.10.14ம் திகதி வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்கு முன்னர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு வேண்டப்படுவதுடன் இன்ஷாஅள்ளாஹ் எதிர்வரும் 2022.10.16ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு கல்லூரி வளாகத்தில் வைத்து குத்தகைக்கு விடப்படும்.
காணிகளின் விபரம்
i. நாவலடி பனையடி 1ம் கண்டம் – 4 ஏக்கர்
ii. நாவலடி பனையடி 2ம் கண்டம் – 4ஏக்கர்
iii. நாவலடி பனையடி 3ம் கண்டம் – 4ஏக்கர்
iv. நாவலடி பனையடி 4ம் கண்டம் – 4ஏக்கர்
v. காத்தான்டவட்டை புதுக்காடு – 2 ஏக்கர்
vi. நேந்தலா புதுச்சேனை – 2 ஏக்கர்
vii. சாளம்பக் கேணி – 3 ஏக்கர்
viii. வீரச்சோலை – 3 ஏக்கர்
ix. சேவகப்பத்து (வாழைத்தோட்டம்) – 1/4 ஏக்கர்
x ஹிஜ்ரா வட்டை – 2 1/2 ஏக்கர்
xi. காரக்குலை – 1 1/4 ஏக்கர்
xii. சேவகப்பத்து – 2 ஏக்கர்
xiii. கொண்டவட்டுவான் – 1 ஏக்கர்
xiv. நாவலடி பனையடி – 2 1/4 ஏக்கர்
xv. வளத்தாப்பிட்டி – 2 1/2 ஏக்கர்
xvi. மல்கம்பிட்டி – 1/2 ஏக்கர்
xvii. ஆணைவிழுந்தான் வட்டை – 2ஏக்கர்
இவ்வண்ணம்
மௌலவி AK.அப்துல் சகூர் (DO)
செயலாளர்
தப்லீகுல் இஸ்லாம் அறபுக்கல்லூரி
சம்மாந்துறை.

