Ads Area

நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.| Powerful earthquake in New Zealand.

 துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

துருக்கி, சிரியா ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் கடந்த மாதம் 6 ம் திகதி துருக்கியின் காசியான்டெப் நகரில் தொடர்ந்து 3 முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியது. இதில் துருக்கி, சிரியா ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டன.

இருநாடுகளிலும் பல ஆயிரம் கட்டடங்கள் சீட்டுக்கட்டுகள் போல் விழுந்தன பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கினர். இதையடுத்து உலக நாடுகள் அனைத்தும் உதவிக்கரம் நீட்டின. துருக்கி, சிரியாவை தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.


இந்தியாவிலும் மலைப்பகுதியையொட்டி மாநிலங்கள், வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

thanksadaderana



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe