Ads Area

புத்தர் சிலைக்கு அடியிலிருந்து சிசு ஒன்று மீட்பு . baby

 வத்தேகம எல்கடுவ வீதியில் மலியதேவ விஹாரைக்குச் செல்லும் வீதிக்கு அருகில் உள்ள புத்தர் சிலைக்கு அடியில் பிறந்த சிசு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.


இதனையடுத்து குறித்த சிசு வத்தேகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


புத்தர் சிலைக்கு அடியில் சிசு ஒன்று காணப்படுவதனை அவதானித்த பிரதேசவாசிகள் அதனை எடுத்துச் சென்று வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.


குழந்தை நலமுடன் இருப்பதாக வத்தேகம வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.


மேலும் குழந்தையை பிரசவித்த தாய் குறித்து அறிந்து கொள்ள வத்தேகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe