Ads Area

சிறையில் இருந்த குற்றவாளியுடன் உல்லாசம் ; சிறை பெண் ஊழியர்..

 இங்கிலாந்து நாட்டில் 2021 ஆம் ஆண்டில் ஆல்பிரட் ஜாரா அலினா (35) என்ற பெண்ணை கொள்ளையடித்து கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார் ஜோர்டான் மெக்ஸ்வீனி(29) என்பவர். இந்தப் படுகொலை பிரிட்டன் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது.


இந்த வழக்கில் குற்றசாடப்பட்ட ஜோர்டான், ‘எந்தவொரு பெண்ணுக்கும் ஆபத்து’ என்று வர்ணிக்கப்பட்டார். கொலை மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு நீதிமன்றத்தால் அவருக்கு 38 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து ஜோர்டான் தென் கிழக்கு லண்டனின் மிகவும் பாதுகாப்பான மற்றும் ஹைடெக் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார். ஜோர்டான் மேலும் பல பெண்களை இதுபோல் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது.


கைதியாக இருந்த ஜோர்டானை 32 வயது சிறை பெண் ஊழியர் நீண்ட நாட்களாக ரகசியமாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்து உள்ளார். ஆனால் இது குறித்த ஆதாரங்கள் எதுவும் சிறை அதிகாரிகளுக்கு கிடைக்கவில்லை.


இந்த நிலையில் இந்த முறை அந்த பெண் ஊழியர் ஜோர்டான் மெக்ஸ்வீனியுடன் உல்லாசமாக இருந்த புகைப்படங்கள் ஆதாரமாக சிக்கியதால் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார். இந்த பெண் ஊழியர் யார் என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. அந்த பெண் மீது லண்டன் பொலிஸார் சிறை போன்ற முக்கியமான இடத்தில், தவறான நடத்தை போன்ற பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe