Ads Area

வெசாக் தினத்தன்று நுவரெலியாவிற்கு வருகை தந்த பெருந்தொகையான முஸ்லிம்கள்.Vesak day

 நேற்று  (05) வெசாக் பௌர்ணமி தினத்துடன் இணைந்த நீண்ட வார விடுமுறையுடன் 8000 இற்கும் அதிகமான முஸ்லிம் வழிபாட்டாளர்கள் (ஆண்கள்) வெள்ளிக்கிழமை நுவரெலியா பிரதான பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக வந்ததாக நுவரெலியா மஸ்ஜிதுல் கபீர் பிரதான ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்தில் 6000க்கும் மேற்பட்டோர் தொழுகை நடத்தலாம் என்றும், ஆனால் வந்த பெருந்திரளான கூட்டத்தால் நுவரெலியா பழைய கண்டி வீதி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முற்றாக நிறுத்தப்பட்டதாகவும், நுவரெலியா போக்குவரத்து பொலிஸாரின் ஆதரவுடன், வீதியில் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகைக்கு அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


2019 ஆம் ஆண்டுக்கு பின்னரே இவ்வாறான ஒரு கூட்டம் நுவரெலியாவிற்கு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


பெருந்தொகையான முஸ்லிம்கள் வீதியில் வழிபாடு செய்ததால் ஒரு மணித்தியாலம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன் பழைய கண்டி வீதிக்கு பதிலாக பக்க வீதிகளில் வாகனங்களை செலுத்த வேண்டியுள்ளதாக நுவரெலியா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe