Ads Area

நால்வரடங்கிய குடும்பத்துக்கு மாதம் 68,056 ரூபா தேவை - தொகை மதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களம்.

 இராஜதுரை ஹஷான்.


நால்வரைக் கொண்ட குடும்பம் மாத மொன்றுக்கு உணவு மற்றும் உணவல்லாத அடிப்படை தேவைகளுக்காக குறைந்த பட்சம் 68,056 ரூபா செலவிடுகிறது. 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இவ் வாழ்க்கை செலவு 144 சதவீதத்தால் உயர் வடைந்துள்ளன என்று தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டு ஜனவரி மாத மாவட்ட அடிப்படையிலான மதிப்பீட்டுக்கு அமைய கொழும்பு நகரில் வாழும் தனி நபர் ஒருவர் தனது அடிப்படை தேவைகளை நிறை வேற்றிக்கொள்வதற்கு 18,350 ரூபாவை செலவிட வேண்டியுள்ளது என திணைக் களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதேபோன்று மாவட்ட அடிப்படை யிலான மதிப்பீட்டு தரப்படுத்தலுக்கு அமைய (தனிநபர் ஒருவரின் அடிப்படை தேவைகளுக்கான குறைந்தபட்ச செலவு தொகை) கம்பஹா மாவட்டம் 18,256, களுத் துறை மாவட்டம் 17,860, கண்டி மாவட்டம் 17,271, மாத்தளை மாவட்டம் 17,247, நுவ ரெலியா மாவட்டம் 17,892, காலி மாவட்டம் 17,287, மாத்தறை மாவட்டம் 16,616, அம் பாந்தோட்டை மாவட்டம் 16,530, யாழ் மாவட்டம் 16,604, மன்னார் மாவட்டம் 17,426, வவுனியா மாவட்டம் 16.997, முல் லைத்தீவு மாவட்டம் 16,894, கிளிநொச்சி மாவட்டம் 16,437, மட்டக்களப்பு மாவட்டம் 17,107. அம்பாறை மாவட்டம் 17,150. திருகோணமலை மாவட்டம் 16,577. குருநாகல் மாவட்டம் 16,713, புத்தளம் மாவட்டம் 17,368, அநுராதபுரம் மாவட்டம் 16,604,பொலனறுவை மாவட்டம் 16,648, பதுளை மாவட்டம் 17,140, மொனராகலை மாவட்டம் 16,268, இரத்தினபுரி மாவட்டம் 17,090, 17,790 6601 தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மதிப்பிட்டுள்ளது.


2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முன் னெடுக்கப்பட்ட மாவட்ட மட்டத்திலான மதிப்பீட்டின்படி தேசிய மட்டத்திலான மாத செலவு 17,014 ரூபா செலவாகுகிறது. இந்த மதிப்பீட்டில் கொழும்பு மாவட்டத்தில் வாழும் தனிநபர் ஒருவரின் ஒருமாத செலவு உயர்வாகவும், மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் செலவு குறை வானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


நான்கு உறுப்பினர்களைக்கொண்ட குடும்பம் ஒன்றின் உணவு மற்றும் உணவல்லாத தேவைகளுக்கு மாதமொன் றுக்கு குறைந்தபட்சம் 68,056 ரூபா செல வாகுவதுடன் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பி டுகையில் இவ்வாழ்க்கை செலவுகள் 144 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது.


2019 ஆம் ஆண்டுக்கு பின்னரான பொரு ளாதார பாதிப்பு,பணவீக்கம் உயர்வு உள் ளிட்ட காரணிகளினால் அத்தியாவசிய பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக் கப்பட்டுள்ளதால் வாழ்க்கை செலவுகள் அதிகரித்துள்ளன. கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் உணவு மற்றும் உணவல் லாத பணவீக்கம் கட்டம் கட்டமாக குறை வடைந்துள்ள நிலையிலும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைவடை யவில்லை. ஆகவே பணவீக்கத் துக்கு அமைய வாழ்க்கைச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என புள்ளிவிப ரவியல் திணைக்களம் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்ணெண்ணின் ஆண்டுக்கு ஆண்டு மாற்றத்தினால் அளவிடப்பட்டவா றான முதன்மைப் பணவீக்கம் கடந்த பெப் ரவரி மாதம் 5.9 சதவீதத்திலிருந்து இந்த மாதம் (மார்ச்)0.9 சதவீதத்துக்கு சடுதியாக குறைவடைந்துள்ளது. உணவல்லா பணவீக்கம் கடந்த பெப்ரவரி மாதம் 07.0 சதவீதமாக காணப்பட்ட நிலையில் இந்த மாதம் 0.5 சதவீதமாக குறைவடைந்துள்ளது. உணவு பணவீக்கம் கடந்த மாதம் 3.5 சதவீதத்திலிருந்து இந்த மாதம் 3.8 சதவீதத்துக்கு உயர்வடைந்துள்ளது.


Thanks - Virakesary





Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe