Ads Area

இஸ்லாமிய அவதூறு கருத்து - கலபொட அத்தே ஞானசார தேரருக்கு அபராதத்துடன் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிப்பு.

முன்னாள் ஆளுநரும் நுஆ கட்சியின் தலைவருமான ஆசாத்சாலி மற்றும் பலர் செய்த முறைப்பாட்டின் பேரில் கௌரவ. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்தி கலபொட அத்தே ஞானசார தேரருக்கு அபராதத்துடன் 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளார்.


பொதுபல சேனா  பொதுச் செயலாளர்  எட்டு வருடங்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டமைக்காக கலகொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


100,000 ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே வியாழக்கிழமை (மார்ச் 28) தீர்ப்பு வழங்கினார். 


2016 ஆம் ஆண்டு குரகல புராதன பௌத்த மடாலயத்தில் கூட்டப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​​தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கு சேதம் விளைவிக்கும் வகையில் இஸ்லாத்திற்கு எதிராக அவதூறான கருத்துக்களை வெளியிட்டதாக ஞானசார தேரர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.


அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகையில் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காகவும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது.


1) 2 ஆண்டுகள் கடுங்காவல் சிறை, ரூ.50,000 அபராதம்


2) 2 ஆண்டுகள் சிறை, ரூ.50,000 அபராதம்


இரண்டு சிறைத் தண்டனைகளும் தனித்தனியாக நிறைவேற்றப்படும் (4 ஆண்டுகள்)


அசாத் சாலி தனது சட்டத்தரணி ருஸ்தி ஹபீபி மற்றும் அவரது குழுவினர் ஊடாக இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.


செய்தி மூலம் - https://www.colombotimes.net




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe